அனுமதியின்றி கட் அவுட் வைத்தால் ஒரு ஆண்டு சிறை - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
அனுமதியின்றி கட் அவுட் பேனர்களை வைத்தால் ஒரு ஆண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகாராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனுமதியின்றி கட் அவுட், பேனர்களை வைத்தால் ஒரு ஆண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகாராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் பேனர்கள் வைக்க, சட்ட விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அனுமதி வழங்கப்பட்ட எண் மற்றும் கால அவகாசத்தையும் சேர்த்து அச்சிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் ஒரு விளம்பர பலகைக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் மற்றும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Next Story

