யோகாவில் சாதனை படைக்கும் சிறுமி, 10 வயதில் 31 உலக சாதனைகள்

யோகாவில் பல்வேறு உலக சாதனைகளை படைத்த நெல்லை சிறுமி, ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட சாதனைகளை செய்ய தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
x
தோன்றின் புகழொடு தோன்றுக என்ற வள்ளுவனின் வாக்கிற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார் நெல்லை சிறுமி பிரிஷா. நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் தேவிபிரியா-கார்த்திகேயன் தம்பதியின் 10 வயது மகளான இவர், சிறு வயதிலேயே 31 உலக சாதனைகள் படைத்துள்ளார். கவுரவ டாக்டர் பட்டம்,100க்கும் மேற்பட்ட தங்க பதக்கம், கோப்பை, சான்றிதழ் என குவித்து வைத்துள்ளார். 

நீச்சல் குளத்தில் நீந்தியபடி ஆசனம், சவாலான கண்டபேருண்டாசனம், வாமதேவாசனம் என மிக கடினமான ஆசனங்களை எளிதாக செய்யும் திறன் பெற்றவர் பிரிஷா. ரப்பர் போல் உடலை வளைத்து யோகா செய்யும் சிறுமியின் சாதனை தாகம் தணியவில்லை. அடுத்தக்கட்ட ஒரே நாளில் 50 உலக சாதனைகள் படைக்கும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

புகழின் உச்சியில் இருக்கும் சிறுமி பிரிஷா, பல கிராமங்களுக்குச் சென்று நலிவடைந்த ஏழை மாணவர்களுக்கு இலவசமாக யோகா பயிற்சி அளிப்பதே தனது கனவு என்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்