அமெரிக்க வாழ் தமிழ் தொழிலதிபர்களை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

நியூயார்க் நகரில் இருந்து இந்திய நேரப்படி மாலை 5.40 மணிக்கு, விமானம் மூலம் பஃபல்லோ என்ற நகருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்றடைந்தார்.
அமெரிக்க வாழ் தமிழ் தொழிலதிபர்களை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
x
நியூயார்க் நகரில் இருந்து இந்திய நேரப்படி மாலை 5.40 மணிக்கு, விமானம் மூலம் பஃபல்லோ என்ற நகருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்றடைந்தார். அங்கு, சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட உள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப்பூங்காவிற்கு தேவைப்படும் தொழில் நுட்பங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கேட்டறிந்தார். செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு, பஃபல்லோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் நியூயார்க் சென்றடைவார். அங்கு, அமெரிக்க வாழ் தமிழ் தொழிலதிபர்களை சந்திக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும், அமெரிக்க தொழில் அதிபர்களையும் சந்தித்து, தமிழகத்தில் தொழில் துவங்க முன்வருமாறு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்