தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்
x
ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வலம்புரி கற்பக விநாயகர், சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பூர் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த நெல்லை மாவட்டம் மணிமூர்த்தீஷ்வரத்தில் அமைந்துள்ள உச்சிஷ்ட விநாயகருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. இந்து அமைப்புகள் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திரளான பக்தர்கள் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டு, பிள்ளையாரை வழிபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்