"போக்குவரத்து மீறல் : புதிய அபராதம் இந்த வாரம் அமல்" - போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

புதிய வாகன சட்ட திருத்த மசோதாவின்படி ஒவ்வொரு போக்குவரத்து விதிமீறலுக்கும் அபராத தொகை பலமடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து மீறல் : புதிய அபராதம் இந்த வாரம் அமல் - போக்குவரத்து அதிகாரிகள் தகவல்
x
புதிய வாகன சட்ட திருத்த மசோதாவின்படி ஒவ்வொரு போக்குவரத்து விதிமீறலுக்கும் அபராத தொகை பலமடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தற்போதைய அபராத தொகை ஐநூறு ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் இருத்தல் உள்ளிட்ட விதிமீறல்களுக்கான அபராதத்தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அபராத கட்டண உயர்வு நேற்று முதல் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேற்குவங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில், தமிழகத்தில், போக்கு வரத்து விதி மீறலுக்காக கூடுதல் அபராதம் விதிக்கும் திட்டம் இந்த வாரத்தில் அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்