ராஜேந்திர சோழன் கட்டிய கோயிலில் தமிழில் வழிபாடு

அரியலூர் அருகே ராஜேந்தி சோழன் கட்டிய ரணசிங்க ஈஸ்வரம் கோயிலில் தேவார, திருவாசகப் பாடல்களுடன் குடமுழுக்கு விழா களைகட்டியது.
ராஜேந்திர சோழன் கட்டிய கோயிலில் தமிழில் வழிபாடு
x
அரியலூர் அருகே ராஜேந்தி சோழன் கட்டிய ரணசிங்க ஈஸ்வரம் கோயிலில், தேவார, திருவாசகப் பாடல்களுடன் குடமுழுக்கு விழா களைகட்டியது. இரணசூரன் என்ற மன்னனை வென்றதன் நினைவாக, சோழ மாமன்னன் ராஜேந்திர சோழனால் இந்த இரணசிங்க ஈஸ்வரம் என்ற சிவன் கோவிலை, கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் குடமுழுக்கு நடந்த முடிவு செய்த கிராம மக்கள், கோயிலை சீர்படுத்தி, இன்று குடமுழுக்கு செய்தனர். பல்வேறு கால பூஜைகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்முறைப்படி பாராயணம் பாடிய சிவாச்சாரியார்கள், கோயில் கோபுரத்தில் புனித நீரை ஊற்றினர். தேவாரம், திருவாசகப் பாடல்களை பாடி தமிழ்முறைப்படி நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்