ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர் பணியிலும் ஒப்பந்த ஊழியர்களா? - மெட்ரோ ரயில் ஊழியர் சங்கம் எதிர்ப்பு

ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர் பணியிலும் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் மெட்ரோ ரயில் சேவையில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர் பணியிலும் ஒப்பந்த ஊழியர்களா? - மெட்ரோ ரயில் ஊழியர் சங்கம் எதிர்ப்பு
x
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் 248 நிரந்தர பணியாளர்களும், 600க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களும் உள்ளனர். ரயில் இயக்கம், நிலைய கட்டுப்பாட்டாளர், உள்ளிட்ட முக்கிய பணிகளில் பயிற்சி பெற்ற நிரந்தர பணியாளர்கள் மட்டுமே நியமிக்கபட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் ரயில் ஓட்டுனர்களில் ஒப்பந்த பணியாளர்களை நிர்வாகம் நியமித்தது. அதன் தொடர்ச்சியாக, இன்று முதல் ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர் பணியிலும் ஒப்பந்த பணியாளர் இறக்கி விடப்பட்டு உள்ளனர். முதல்கட்டமாக 9 ரயில் நிலையங்களில் ஒப்பந்த பணி கட்டுப்பாட்டாளர் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரவித்துள்ள மெட்ரோ ரயில் ஊழியர் சங்கம், ரயில் சேவையில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் ஆர்பாட்டடத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளளது. 

Next Story

மேலும் செய்திகள்