தெலங்கானா ஆளுநராக டாக்டர் தமிழிசை நியமனம்...

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
x
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர்களை நியமித்தும் மாற்றியும் குடியரசுத் தலைவர் மாளிகை உத்தரவிட்டுள்ளது. ஹிமாச்சல்பிரதேச ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அங்கிருந்த கல்ராஜ் மிஸ்ரா, ராஜஸ்தான் மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநில ஆளுநராக பகத் சிங் கொஸ்யாரி, கேரள மாநில ஆளுநராக ஆரிஃப் முகமது கான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக பாஜக தலைவரான டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்து, கடும் சவால்களை சந்தித்த தமிழிசைக்கு, தற்போது ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.  

தெலங்கானா ஆளுநரானார், தமிழிசை : கே.டி.ராகவன் கருத்து


தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம் -  ரவீந்திரன் துரைசாமி கருத்து 


தமிழிசையின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் தெலங்கானா ஆளுநர் பதவி - சி.பி.ராதாகிருஷ்ணன்


தெலங்கானா ஆளுநரானார் தமிழிசை : பத்திரிகையாளர் கோலாகல சீனிவாசன் கருத்து 


தெலங்கானா ஆளுநரானார் தமிழிசை : மூத்த பத்திரிகையாளர் மாலன் கருத்து
 

தெலங்கானா ஆளுநரானார் தமிழிசை : செம்மலை, அதிமுக  கருத்து 


தெலங்கானா ஆளுநரானார் தமிழிசை : மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் கருத்து 


நான் எப்போதும் தமிழகத்துக்கு சகோதரி - தமிழிசை


ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜன், தமிழகத்துக்கு எப்போதும் தாம் சகோதரிதான் என்று கூறியுள்ளார். தமிழகத்துக்கான தமது சேவை எப்போதும் போல் இருக்கும் என்றும் தந்தி டிவிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்