கருணாநிதி வழியில் வெற்றி பெற்றவர் ஸ்டாலின் - தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை சவுகார் பேட்டையில், தமிழகத்தின் தலைமகனுக்கு தமிழாஞ்சலி என்ற தலைப்பில் நேற்று பொது கூட்டம் நடைபெற்றது.
x
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை சவுகார் பேட்டையில், தமிழகத்தின் தலைமகனுக்கு தமிழாஞ்சலி என்ற தலைப்பில் நேற்று பொது கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு  உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் பேசிய தயாநிதிமாறன், கருணாநிதி வழியில், தேர்தலில் வெற்றி பெற்றவர் ஸ்டாலின் என்று தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன்,  சுவிஸ் வங்கி அறிக்கை வெளியாவதாக  சொல்லியே பா.ஜ.க. 5 ஆண்டுக்கு முன்பு ஆட்சிக்கு வந்ததாகவும்,  இந்த விவகாரத்தில் யார் யாரெல்லாம் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்