அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி மாணவர் சேர்க்கை : 14 மாவட்டங்களில் பூஜ்ஜியம் சேர்க்கை?

கரூர், நாமக்கல் உள்பட 14 மாவட்டங்களில் இயங்கும் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி மாணவர் சேர்க்கை பூஜ்ஜியத்தில் இருப்பதாக கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி மாணவர் சேர்க்கை  : 14 மாவட்டங்களில் பூஜ்ஜியம் சேர்க்கை?
x
கல்வித்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கையில், ஆரம்ப பள்ளி அளவில் எடுத்துக்கொண்டால், கோவை, கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, திருப்பூர்,  விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் எல்.கே.ஜி.,வகுப்பில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என தெரிவித்துள்ளது. மேற்கண்ட ஏழு மாவட்டங்களுடன், ராமநாதபுரமும் சேர்த்து மொத்தம் 8 மாவட்டங்களில் யுகேஜி வகுப்பில் பூஜ்ஜியம் மாணவர் சேர்க்கை என குறிப்பிட்டுள்ளது. உயர்நிலைப்பள்ளி அளவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், எல்.கே.ஜி., வகுப்பில் 3 குழந்தைகளும், கோவை மாவட்டத்தில் 61 குழந்தைகளும் சேர்ந்திருப்பதாக கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மேல்நிலைப்பள்ளி அளவில் பார்த்தால், எல்.கே.ஜி., வகுப்பில், கன்னியாகுமரி, திருவாரூர், விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் பூஜ்ஜியமாகவும், தர்மபுரி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் யு.கே.ஜி., வகுப்பில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என தெரிவித்துள்ளது. ஒட்டு மொத்த அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 702 ஆக இருப்பதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்