குடியாத்தம் : கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

குடியாத்தம் அடுத்த பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில், எரிவாயு டேங்கர் லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.
குடியாத்தம் : கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
x
குடியாத்தம் அடுத்த பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில், எரிவாயு டேங்கர் லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. 18 டன் எரிவாயு நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. ஓட்டுநர் அளித்த தகவலின்படி, அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 5 மணி நேரம் போராடி, எந்தவித அசம்பாவிதமின்றி எரிவாயு டேங்கர் லாரியை பத்திரமாக மீட்டனர். விபத்து காரணமாக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்