சுற்றுச்சூழல் நட்பான 'விதை விநாயகர்' : ஜருகுமலையில் சிலைகளை போட திட்டம்

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரி மாணவர்கள், சுற்றுச்சூழல் நட்பான விதை விநாயகரை உருவாக்கியுள்ளனர்.
சுற்றுச்சூழல் நட்பான விதை விநாயகர் : ஜருகுமலையில் சிலைகளை போட திட்டம்
x
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரி மாணவர்கள், சுற்றுச்சூழல் நட்பான விதை விநாயகரை உருவாக்கியுள்ளனர். வேம்பு, புங்கை, பூவரசம் மற்றும் புளிய மர விதைகளை கொண்டு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த விநாயகர் சிலையை ஒரே இடத்தில் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். இதேபோல், அம்மாப்பேட்டையில் உள்ள கல்லூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. ஆட்டம், பாட்டம் என சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

விநாயகர் சிலையை அலங்கரிக்கும் குடைகள் தயாரிப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடலூர் மஞ்சக்குப்பத்தில் வண்ணக் குடைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை களைகட்டியுள்ளது. வண்ண நூல்கள், மினுமினுக்கும் ஜிகினா, பட்டுநூல் குஞ்சம், பளபளக்கும் பல பொருட்கள் கொண்டு சிறந்த வேலைபாடுகளுடன் அந்த விநாயகர் சிலைக்கான குடைகள் தயாராகி வருகிறது. காகிதம், அலுமினிய பலகை, த​ங்க நிறம், அலங்கார பூ வேலைகளுடனும் சுழலும் குடைகள் இந்த ஆண்டின் சிறப்பு என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 15 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை குடை வைத்த விநாயகர் சிலை, மக்களை அதிகம் கவர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்