சீட்டு கம்பெனி நடத்தி பணம் மோசடி செய்த வழக்கு - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை

சீட்டு கம்பெனி நடத்தி பணம் மோசடி செய்த நடிகர் கவின் தாயார் உள்ளிட்ட 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சீட்டு கம்பெனி நடத்தி பணம் மோசடி செய்த வழக்கு - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை
x
டி.வி. சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கவின். நட்புனா என்னானு தெரியுமா என்ற படத்தின் நாயகமான தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார், கவின்

சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்ததால், நடிகர் கவினின் குடும்த்தினருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி கே கே நகர் பகுதியை சேர்ந்த அருணகிரி-தமயந்தி தம்பதியின் மகள் ராஜலட்சுமி, மகன் சொர்ணராஜன் மற்றும் மருமகள் ராணி ஆகியோர், சீட்டு கம்பெனி ஒன்றை அனுமதியின்றி நடத்தி வந்துள்ளனர். 

இவர்கள் யாருக்கும் பணத்தை திருப்பி தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுடைய பணம் 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை பெற்று தரக் கோரி கடந்த 2007ஆம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இறுதிகட்ட விசாரணை முடிந்தநிலையில், இந்த வழக்கில், குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

குற்றம்சாட்டப்பட்ட அருணகிரி, அவரின் மகன் சொர்ணராஜன் இறந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தமயந்தி, ராஜலட்சுமி மற்றும் ராணி ஆகிய 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் சாட்சி அளித்த 29 பேருக்கு தலா ஒரு லட்சம் என 29 லட்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

பண மோசடி வழக்கில், சிறை தண்டனை பெற்ற ராஜலட்சுமி நடிகர் கவின் தாயார். தமயந்தி மற்றும் ராணி ஆகியோரும் அதே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்