தங்க தமிழ்ச்செல்வன், வி.பி.கலைராஜனுக்கு தி.மு.க-வில் பொறுப்பு

தி.மு.க-வின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
x
தி.மு.க-வின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோர்களுடன் இணைந்து தங்க தமிழ்ச்செல்வனும் செயல்படுவார் என தெரிவித்துள்ளார். அத்துடன், முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.கலைராஜன், தி.மு.க-வின் இலக்கிய அணி இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, நியமிக்கப்பட்ட நிர்வாகிகளோடு, இவர் இணைந்து பணியாற்றுவார் என அன்பழகன் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்