அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்தவருக்கு அறிவுரை : அறிவுரை கூறியவரின் வீடு புகுந்து அடி, உதை - 6 பேர் கைது

வாணியம்பாடியில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்தவருக்கு அறிவுரை கூறியவரின், வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்தவருக்கு அறிவுரை : அறிவுரை கூறியவரின் வீடு புகுந்து அடி, உதை - 6 பேர் கைது
x
வாணியம்பாடி நியூடவுன் பகுதி மில்லத் நகரில் வசித்து வரும் சித்திக் - சாஜிதா தம்பதி கடைக்கு சென்று திரும்பிய போது, சதாம் என்பவர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது சதாமை நிறுத்திய சாஜிதா, அப்பகுதியில் குழந்தைகள் இருப்பதால் வேகமாக செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். வாகனம் மோதி குழந்தை உயிர் இழந்தால், பணம் தந்து விடுவதாக கூறி, சாஜிதாவை அவதூறாக பேசியுள்ளார். இதனால் சதாமை சாஜிதாவின் கணவர் சித்திக், தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சதாம், நண்பர்களுடன் சித்திக் வீட்டிற்குள் புகுந்து சாஜிதா குடும்பத்தினரை தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் சிகிச்சை பெற்றுவரும்  மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடிகளையும் சதாம் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.  தகவலறிந்த வாணியம்பாடி போலீசார் சதாம், அபு, பரசுராமன், ஃபசல், ரஹீம் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்