5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் பெயரில் அறக்கட்டளை

சென்னை வண்ணாரப்பேட்டையில் 50 ஆண்டு காலமாக ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற மறைந்த மருத்துவர் ஜெயச்சந்திரன் பெயரில் அவரது குடும்பத்தினர் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உள்ளனர்.
5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் பெயரில் அறக்கட்டளை
x
சென்னை வண்ணாரப்பேட்டையில் 50 ஆண்டு காலமாக ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற  மறைந்த மருத்துவர் ஜெயச்சந்திரன் பெயரில் அவரது குடும்பத்தினர் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உள்ளனர். அவரது  72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தொடங்கப்பட்ட  அறக்கட்டளையை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்  தொடங்கி வைத்தார். மருத்துவர் ஜெயச்சந்திரன் படத்தை ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் அட்லி உள்ளிடோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நீதிபதி கிருபாகரன்,  வாழ்க்கையே இயந்திரத்தனமாக மாறி விட்டது என்று கூறினார்.  மற்றவர்களுக்கு  உதவி செய்யும் எண்ணம் மக்களுக்கு உருவாக வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்