குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த வேண்டும் - நடிகை த்ரிஷா
சமூக அக்கறை கொண்ட தொண்டு அமைப்புகளால் மட்டுமே குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த முடியும் என, நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
சமூக அக்கறை கொண்ட தொண்டு அமைப்புகளால் மட்டுமே குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த முடியும் என, நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். யுனிசெஃப் நிறுவன நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் நடிகை த்ரிஷா, சென்னை எண்ணூரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்கள் மற்றும் சிறுவர் - சிறுமியர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நடிகை திரிஷா, காதலிப்பது தவறு இல்லை எனவும், ஆனால் 15 வயதில் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
Next Story