சிசிடிவி கேமராக்கள் மூலம் 50% குற்றங்கள் குறைந்துள்ளன - ஏ.கே.விஸ்வநாதன் பேச்சு

சென்னையை அடுத்த முட்டுக்காடு படகு இல்லம் அருகில் அதிநவீன கேமராக்களுடன் கூடிய புதிய புறக்காவல் நிலையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் திறந்து வைத்தார்.
x
சென்னையை அடுத்த முட்டுக்காடு படகு இல்லம் அருகில் அதிநவீன கேமராக்களுடன் கூடிய புதிய புறக்காவல் நிலையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் திறந்து வைத்தார். சென்னை அடுத்து கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முட்டுக்காடு படகு இல்லம் அருகில் இந்த புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக பதிவு செய்யும் திறன் கொண்ட ஏ.என்.பி.ஆர் சிசிடிவி கேமராக்கள் இந்த காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றச்செயல் புரியும் வாகனங்கள் அதிவிரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து சென்னை, அக்கரை பகுதியில் நிறுவப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களை தொடங்கி வைத்த மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றங்கள் பாதியாக குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்