ஆசிரியர்களை வதைக்கும் சர்ப்பிளஸ் விவகாரம் : ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பள்ளிக்கு செல்லும் அவலம்

"சர்பிளஸ்" எனப்படும் உபரி ஆசிரியர் என்ற கணக்கீடு காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பள்ளி என, பந்தாடப்படுவதால், அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
x
2018 ஆம் ஆண்டு முன்பு வரை, அரசு உயர்நிலை பள்ளிகளில் 8 ஆசிரியர்கள் பணியாற்றி வந்த நிலையில் ஒரு பள்ளிக்கு 5 பணியிடங்கள் தான் என வெளியிடப்பட்ட அரசாணையால், ஒரு பள்ளிக்கு 3 ஆசிரியர் வீதம் உபரியாக கணக்கிடப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான ஆசிரியர் உபரி பணியிடங்களாக மாறி, ஒரு பள்ளியில் ஜூனியர் ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுகின்றனர். இப்படி மாறினாலும், அந்த பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற முடியாது. ஏனெனில், அடுத்த ஆண்டில், அங்கும் மாணவர்கள் குறைவு என்ற காரணத்தை காட்டி மீண்டும் வேறொரு பள்ளிக்கு மாறுதல் உத்தரவு வரும். இந்த உபரி ஆசிரியர் கணக்கீட்டால் ஆசிரியர்கள் வதைபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்