தென்காசி எம்.பி.யின், சித்தப்பா வெட்டிக் கொலை...

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே திமுக எம்பி தனுஷ்குமாரின் சித்தப்பா வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி எம்.பி.யின், சித்தப்பா வெட்டிக் கொலை...
x
தேவதானத்தை சேர்ந்த 55 வயதான கருப்பையா, அங்குள்ள ரேஷன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர், தேவதானம் பகுதியில் மர்ம நபர்களால் நேற்றிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தகவலின் பேரில் சென்ற, சேத்தூர் போலீசார், கருப்பையாவின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். இதனால், தேவதானம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. சம்பவ இடத்துக்கு மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கொலைக்கான காரணம் என்ன, கொலையாளி யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்