தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டம்

பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டம்
x
திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் அலுவலகம் முன் அமர்ந்து போராட்டம் நடத்திய மருத்துவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர். கும்பகோணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தியதால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

ஆரணியில் அரசு மருத்துவர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர். அப்போது சிகிச்சைக்கு வந்த ஒருவர் தரையில் படுத்துக் கொண்டு டாக்டர்களை பார்த்து சிகிச்சை வழங்குமாறு கூறி கதறியழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. நாகர்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர். அதேநேரம் அவசர சிகிச்சைகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

"மருத்துவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்" - அமைச்சர் விஜயபாஸ்கர் 

மருத்துவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் எனவும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு தொலைபேசி வழியாக பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்