நாளுக்கு நாள் விலை உயரும் தங்கம்... தங்க நகை செய்யும் தொழிலாளிகளின் பரிதாப நிலை

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்துவருவது பொது மக்கள் மற்றும் தங்கம் சார்ந்த தொழிலாளர்களை எந்த வகையில் பாதித்துள்ளது என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு
x
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், பொதுமக்கள் மட்டுமின்றி தங்கம் சார்ந்த தொழிலாளர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. மக்கள் தங்கம் வாங்க முன்வராத‌தால், நகைக்கடைகள் பெரும்பாலான ஆர்டர்களை நிறுத்தியுள்ளன. இதனால்,  சிறு தங்க வியாபாரிகள், தங்க நகை செய்பவர்கள் பலரும் வேலையின்றி மாற்று வேலைக்கு செல்வதாக சக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். எஞ்சியுள்ள தொழிலாளர்களும் விலை உயர்வு நீடித்தால் மாற்று வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்று வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.

மத்திய அரசு நகை விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்த சிறு நகை கடை உரிமையாளர்கள் , தங்கம் விலை தொடர்ந்து உயரும் நிலை ஏற்பட்டால்,கொள்ளை அதிகரிக்கும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். 

நகை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையை வெளிப்படுத்திய பொதுமக்களும் , கொலை கொள்ளை அதிகரிக்கும் என அச்சம் தெரிவித்தனர். 

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், தங்கம் விலை குறையுமா என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்