சட்டவிரோதமாக செயல்பட்ட தொலைபேசி இணைப்பகம், வெளிநாட்டு அழைப்புகளை மாற்றி வருவாய் மோசடி

சட்டவிரோத தொலைபேசி இணைப்பக மோசடியில் கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக செயல்பட்ட தொலைபேசி இணைப்பகம், வெளிநாட்டு அழைப்புகளை மாற்றி வருவாய் மோசடி
x
சென்னை அண்ணா நகரில் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் செயல்படுவதாக மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர். அந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து வரும் இணைய அழைப்புகளை, சிம் பாக்ஸ் என்கிற கருவி மூலம்  உள்ளூர் அழைப்புகளாக மாற்றி அளித்து வந்துள்ளது. இதன் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளதையும் போலீசார் கண்டறிந்தனர். இந்த சட்டவிரோத இணைப்பகம் மூலமாக வரும் அழைப்புகளை கண்காணிக்கவோ, பதிவு செய்யவோ முடியாது என்பதால் நாசவேலைகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறிய போலீசார் கைதாகியுள்ள 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்