ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரும் வழக்கு விசாரணை நிலையை தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான சிபிஐ மற்றும் விசாரணை ஆணையத்தின் விசாரணை நிலையை தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரும் வழக்கு விசாரணை நிலையை தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
x
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாசு ஏற்படுத்தும் ஆலையை மூட வேண்டும் என்றும், அமைதியான முறையில் நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் கொல்லப்பட்டதாகவும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் வாதிடப்பட்டது. வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ மற்றும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணைகளின் நிலை குறித்து நாளை தெரிவிக்குமாறு, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்