ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் குளிக்க 18 வது நாளாக தடை
காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் ஒகேனக்கலில் அமைக்கப்பட்டு இருந்த நடைபாதை பாதுகாப்பு இரும்பு வேலிகள் அடித்து செல்லப்பட்டுள்ளது.
கேஆர்எஸ் மற்றும் கபினி அணையில் இருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் ஒகேனக்கலில் அமைக்கப்பட்டு இருந்த நடைபாதை பாதுகாப்பு இரும்பு வேலிகள் அடித்து செல்லப்பட்டுள்ளது. அதேபோல், பெண்கள் குளிக்கும் அறைகளின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து நீர்வீழ்ச்சியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடை 18வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் பரிசல்துறையில் இருந்து பரிசல்களை இயக்காமல் சின்னாறு வழியாக கோத்திக்கல் பாறையில் இருந்து மணல்மேடு வரை பாதுகாப்பாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
Next Story

