ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் : ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள ஐஐடி பொறியாளர்கள்

55 ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் : ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள ஐஐடி பொறியாளர்கள்
x
ராமநாதபுரம் மாவட்டத்தில், தனுஷ்கோடிக்கு மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 1914 ஆம் ஆண்டு, உருவாக்கப்பட்ட அந்த ரயில் பாதை, 1964 ஆம் ஆண்டு புயலில் முற்றிலும் சேதமடைந்த நிலையில்  தற்போது மீண்டும் ரயில் சேவை தொடங்க மத்திய அரசு 208 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. 

இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் சென்னை ஐஐடியை சேர்ந்த பொறியாளர்கள் கொண்ட குழு ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து தனுஷ்கோடி வரை, பழைய ரயில் பாதை வழியாக ஆய்வு பணியை மேற்கொண்டது. ஏற்கனவே இருந்த ரயில் பாதையில், தற்போது பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், அவைகளை அகற்றுவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்