நேரடி நெல்விதைப்பு செய்யுங்கள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நீரை சிக்கனமாக பயன்படுத்த நேரடி நெல்விதைப்பு முறையினை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்
நேரடி நெல்விதைப்பு செய்யுங்கள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
நீரை சிக்கனமாக பயன்படுத்த நேரடி நெல்விதைப்பு முறையினை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேரடி விதைப்பு மூலம் பயிரிடுவதால், 40 முதல் 45 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்படும் என்றும் நேரடி நெல் விதைப்புக்கான நெல் விதைகளை, போதுமான அளவு இருப்பு வைக்க வேளாண் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

நேரடி நெல் விதைப்பை மேற்கொள்ள ஏக்கருக்கு 600 ரூபாய் உழவு மானியம்  வழங்கப்படும் என்றும்,  5 லட்சம் ஏக்கர் நேரடி நெல் விதைப்பு மானியத்துக்காக 30 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
 
டெல்டா மாவட்டங்களில் மட்டும்13 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ள முதலமைச்சர், நேரடி விதைப்பு மூலம், 15 நாட்கள் முன்னதாகவே அறுவடைக்கு தயாராகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.  

அனைத்து விவசாயிகளும் நேரடி நெல் விதைப்பு செய்து நீரை சேமித்து அதிக விளைச்சல் பெறுமாறு  முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்