திருவொற்றியூர் அருகே இருவேறு இடத்தில் செயின் பறிப்பு - இளம் கொள்ளையனை கைது செய்த போலீஸ்

திருவொற்றியூர் அருகே இரு வேறு இடங்களில் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவொற்றியூர் அருகே இருவேறு இடத்தில் செயின் பறிப்பு - இளம் கொள்ளையனை கைது செய்த போலீஸ்
x
திருவொற்றியூரில், சாலையில் நடந்த சென்ற ஜாஸ்மின் என்ற பெண்ணிடம் செல்போன் பறிக்கப்பட்டது. அதேபோல், புதுவண்ணாரப்பேட்டை சேனி அம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்ற கல்யாணி என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை இளைஞர் ஒருவர் பறித்து சென்றார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஒரே கொள்ளையன் இரு சம்பவத்தில் ஈடுபட்டதை உறுதி செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்