நள்ளிரவில் திருடனை பிடித்த ஆட்டோ ஓட்டுனர் - பரபரப்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு

நள்ளிரவில் திருட வந்த திருடனை ஆட்டோ ஓட்டுனர் போராடி பிடித்த சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நள்ளிரவில் திருடனை பிடித்த ஆட்டோ ஓட்டுனர் - பரபரப்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு
x
நள்ளிரவில் திருட வந்த திருடனை ஆட்டோ ஓட்டுனர் போராடி பிடித்த சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில், பரவி வருகிறது. சேலம் மாவட்டம், அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த சதாசிவம், ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர், வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி விட்டு தூங்கியுள்ளார். அப்போது, நள்ளிரவு வீட்டின் அருகே ஏதோ சத்தம் கேட்டு திடீரென்று கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தபோது, அப்போது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவரது ஆட்டோவிலிருந்து பேட்டரியை கழற்றி கொண்டு இருந்தது தெரியவந்தது. சதாசிவத்தை கண்டதும் கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றனர். இருப்பினும், சதாசிவம் அவர்களை பிடித்து கீழே தள்ளினார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் திருடர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்