வங்கி ஊழியர் போல் நடித்து ரூ.30 ஆயிரம் கொள்ளை - மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு.

சென்னையில் வங்கி ஊழியர் போல் நடித்து 30 ஆயிரம் ரூபாயை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வங்கி ஊழியர் போல் நடித்து ரூ.30 ஆயிரம் கொள்ளை - மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு.
x
சென்னையில், வங்கி ஊழியர் போல் நடித்து 30 ஆயிரம் ரூபாயை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த சாத்ராஜ் என்பவர் , ராயப்பேட்டையில் உள்ள தனியார் வங்கியில், 30 ஆயிரம் ரூபாய் எடுக்க வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தன்னை வங்கி ஊழியர் என அறிமுகப்படுத்தி கொண்டு, வங்கி பாஸ் புக்கில் உள்ள முகவரியை மாற்றி தருவதாக கூறி சாத்ராஜை அருகே ஒரு அலுவலகத்திற்கு அழைத்து சென்று, அவரிடம் ஏமாற்றி பணத்தை பெற்று கொண்டு தப்பி சென்று விட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாத்ராஜ் இது தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்