தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்

ராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.
தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்
x
ராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால், அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். ராமேஸ்வரம் பகுதியில் உள்ள 8 கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் பஞ்ச கல்யாணி ஆற்றில், இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால் ஆறு துர்நாற்றம் வீசி வந்தது. இந்நிலையில் சமூக விரோதிகள் சிலர்,  ஆற்றில் தண்ணீர் தேங்கவிடாமல் கடலுக்குள் வெட்டிவிட்டுள்ளனர். இதனால் ஆறு, தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் நிலையில்,  அப்பகுதிகளில் சுற்றித்திரியும் குதிரைகள், தண்ணீர் தேடி கடற்கரை மற்றும் ஊருக்குள் வரத் துவங்கியுள்ளன, இதனால் அவை விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்