வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா - பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா வரும் 29-ல் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா - பாதுகாப்பு மற்றும்  வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
x
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா வரும் 29-ல் கொடியேற்றத்துடன் தொடங்க  உள்ள நிலையில்,  திருவிழா பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் வசதி குறித்த ஆய்வுக் கூட்டம் நாகை ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் வேளாங்கண்ணியில் நடைபெற்றது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை விரிவாக செய்திட வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.வேளாங்கண்ணி முழுவதும் சுமார் 180 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்