மது கடைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து 2 நாட்கள் நடக்கும் குறை கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கலாம் - டாஸ்மாக் நிர்வாகம்

மது கடைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து மாதம் 2 நாட்கள் நடக்கும் குறை கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கலாம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மது கடைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து 2 நாட்கள் நடக்கும் குறை கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கலாம் - டாஸ்மாக் நிர்வாகம்
x
டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார், அனைத்து முதுநிலை மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மதுபானங்கள் கூடுதல் விலை, குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே திறப்பது உள்ளிட்டவை தொடர்பாக தலைமை அலுவலகத்தில் குவியும் புகார் மனுக்களால் பணிகளில் இடையூறு ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தவிர்க்க, மாதந்தோறும் 2 மற்றும் 4-வது செவ்வாய்கிழமைகளில், அந்தந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகங்களில் குறை கேட்பு கூட்டம் நடைபெறும் என சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறை கேட்பு  கூட்டம் குறித்து அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும் என்றும் டாஸ்மாக் மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மனு கிடைத்த 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தாமதமாகும் பட்சத்தில் அது குறித்து மனுதாரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்