"2014க்கு பிறகு இப்போது தான் பால் விலை ஏற்றப்பட்டுள்ளது" - அமைச்சர் செல்லூர் ராஜூ

2014க்கு பிறகு பால் விலை இப்போது தான் ஏற்றப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
x
அரசை குறை கூறுவது எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினுக்கு வழக்கமான ஒன்று எனவும், 2014க்கு பிறகு பால் விலை இப்போது தான் ஏற்றப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். சென்னை சாலிகிராமத்தில் கூட்டுறவுத்துறையும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனும் இணைந்து பெட்ரோல், டீசல் வழங்கும் நிலையத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று தான் முதலமைச்சர் விலையை உயர்த்தியுள்ளார் என்றும் தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்