தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபத்து : 2 சக்கர வாகனம் மீது விரைவு ரயில் மோதியது

சென்னை கொருக்குப்பேட்டையில், தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு 2 சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற சுமதி என்பவர், ரயில்வே கேட் அடிப்பகுதி வழியே நுழைந்து தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபத்து : 2 சக்கர வாகனம் மீது விரைவு ரயில் மோதியது
x
சென்னை கொருக்குப்பேட்டையில், தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு 2  சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற சுமதி என்பவர், ரயில்வே கேட் அடிப்பகுதி வழியே நுழைந்து தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, நெல்லூரில் இருந்து எழும்பூர் சென்ற விரைவு ரயில் அசுர வேகமாக வந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து சுமதி வாகனத்தை அப்படியே போட்டுவிட்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஓரமாக ஒதுங்கியுள்ளார்.  இதனை அடுத்து வேகமாக வந்த விரைவு ரயில் இருசக்கர வாகனத்தின் மீது ஏறி சிறிது தூரம் இழுத்து சென்று நின்றது. தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் பல மணி நேர போராட்டத்திற்கு பின் விரைவு ரயில் கீழே மாட்டிக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை மீட்டு ரயில் போக்குவரத்தை சீர் படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்