கடல்நீர் மட்டம் உயர்ந்து திடீர் கடலரிப்பு : குடியிருப்பு பகுதிகளில் கடல்நீர் புகும் அபாயம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டாரத்தில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதால், குடியிருப்பு பகுதிகளில் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடல்நீர் மட்டம் உயர்ந்து திடீர் கடலரிப்பு : குடியிருப்பு பகுதிகளில் கடல்நீர் புகும் அபாயம்
x
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டாரத்தில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதால், குடியிருப்பு பகுதிகளில் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குளச்சல், வாணியக்குடி, கொட்டில்பாடு, கடியப்பட்டணம் கடல் பகுதிகளில் கடல் சீற்றம் மற்றும் கடல் நீர் மட்டம் உயர்வால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கடலரிப்பானது சுமார் 10 அடி உயர மண் மேடுகளை கடலுக்குள் இழுத்து சென்றது. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் மணல் அரிப்பு ஏற்பட்டு, வீடுகள் உடைந்து கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், துறைமுக பகுதியும் கடலரிப்பால் பாதிக்கப்படும் என்பதால், மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்தனர்.   


Next Story

மேலும் செய்திகள்