ஓட்டல் கழிவுகளை கொடைக்கானலுக்குள் கொட்டக் கூடாது : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
இயற்கை வளத்தை பாதுகாக்க, ஓட்டல் கழிவுகளை கொடைக்கானலுக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இயற்கை வளத்தை பாதுகாக்க, ஓட்டல் கழிவுகளை கொடைக்கானலுக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விதிமீறல் கட்டிடங்களுக்கு சீல் வைப்பது, இடிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரி, ஓட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த கிருபாகரன், சுவாமிநாதன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், கொடைக்கானலில், 6 மாதத்துக்கு ஒரு முறை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தி உயர்நீதிமன்ற பதிவாளரிடம், அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Next Story