துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் தூய்மை பணி மேற்கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.
அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் தூய்மை பணி மேற்கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை ஒரு கோடியே 7 ஆயிரம் பேர் தரிசித்தனர். இந்நிலையில்அங்கு வீசப்பட்ட குடிநீர் பாட்டில்கள் , காலணிகள் மற்றும் குப்பைகள் என சுமார் 30 டன் கழிவுகள் சேர்ந்தன. இதனை சென்னை உள்ளிட்ட நான்கு மாநகராட்சிகள், 58 நகராட்சி ஊழியர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 217 பேர் சுத்தம் செய்தனர் . சிறப்பாக பணி செய்த துப்புரவு பணியாளர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
Next Story