ஆக 26- ல் தமிழக அரசின் "கல்வி டிவி" உதயம் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

வருகிற 26 ம் தேதி, தமிழக அரசு சார்பில் "கல்வி டிவி" என்ற புதிய தொலைக்காட்சி உதயமாகிறது.
x
வருகிற 26 ம் தேதி, தமிழக அரசு சார்பில்   "கல்வி டிவி" என்ற புதிய தொலைக்காட்சி உதயமாகிறது. இந்த தகவலை, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.  தமிழக மாணவ- மாணவிகளின் அறிவு வளர்ச்சிக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும் என்றும், பிற நாடுகளின் பண்பாடு குறித்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வந்தால், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி நடவடிக்கை எடுப்பார் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்