சதுப்பு நிலம் ஆக்ரமிப்பு : ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

சென்னையில், நான்காயிரத்து 900 ஹெக்டேர் சதுப்பு நிலம் ஆக்ரமிக்கப் பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சதுப்பு நிலம் ஆக்ரமிப்பு : ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
x
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சதுப்பு நிலங்களை பாதுகாக்க சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு பதிவு செய்தது. சதுப்பு நில ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்ய மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டிருந்தார். நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது,  கழுவேலி, பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் குறித்த அறிக்கையை வழக்கறிஞர் பி.எஸ் ராமன் தாக்கல் செய்தார்.

பள்ளிக்கரணையில் பலரும் ஆக்ரமித்திருப்பதாகவும், கடந்த 1965 ஆம் ஆண்டு, 5 ஆயிரத்து 500 ஹெக்டேராக இருந்த சதுப்பு நிலம், 2013ஆம் ஆண்டு 600 ஹெக்டேராக சுருங்கி விட்டதாக கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆயிரத்து 85 குடியிருப்புகள் ஆக்கிரமித்துள்ளதாகவும், பறக்கும் ரயில் நிலையத்துக்கு நூறு ஏக்கர், தேசிய கடல்சார் கல்வி நிறுவனத்துக்கு 20 புள்ளி 25 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மத்திய காற்றாலை நிறுவனம், தனியார் ஐ.டி. நிறுவனங்கள் ஆகியவையும் சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது. சதுப்பு நில ஆக்கிரமிப்பு அறிக்கையை பார்த்த நீதிபதிகள், இது குறித்து வரும் 21ம் தேதி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்