சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி : தலைமறைவான குடும்பத்தை தேடும் போலீசார்
சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்து, தலைமறைவாக இருப்பவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்து, தலைமறைவாக இருப்பவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த பானுமதி, அவரின் மகன் யுவராஜ், மகள்கள் ஷீலா, சுகன்யா, பானுமதி ஆகியோர் அந்த பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தலைமறைவான அவர்களை தேடி வரும் போலீசார், சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை முடக்கியுள்ளனர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அவர்கள் பிடிபடாத நிலையில், குற்றவாளிகள் குறித்து தகவல் அளிக்குமாறு பொதுமக்களுக்கு, போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story