கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் நிரம்பி வரும் ஏரிகள்

கிருஷ்ணகிரியில் தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் நிரம்பி வரும் ஏரிகள்
x
கிருஷ்ணகிரியில் தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி அருகே 163 ஏக்கர் பரப்பளவில் படேதலாவ் ஏரி அமைந்துள்ளது. கர்நாடகாவின் உற்பத்தியாகும் மார்க்கண்டேயன் நதியிலிருந்து இந்த ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஏரிகளை தூர்வார தமிழக அரசு எடுத்த துரித நடவடிக்கையால் தற்போது ஏரியில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்பதாகவும், இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனையும் தீரும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்