65-ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது பவானிசாகர் அணை

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பெற்ற பவானிசாகர் அணை, இன்று 65 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
65-ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது பவானிசாகர் அணை
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பவானிசாகர் அணை 1955 ஆண்டு  ஆகஸ்ட் 19 ம் தேதி  கட்டி முடிக்கப்பட்டது. பத்தரை கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அணையை அப்போதைய முதலமைச்சர் காமராஜர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பவானிசாகர் அணை மூலம்  ஈரோடு, திருப்பூர் மற்றும் கருர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 1953 ஆண்டு  பவானி சாகர் அணையின் கட்டுமான பணிகள்  நடைபெற்ற போது அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், சென்னை மாகாண முதல்வர் ராஜாஜியும் நேரில் பார்வையிட்டுள்ளனர். அணை கட்டுமான பணிக்கு தேவையான  இயந்திரங்கள் லண்டனிலிருந்து வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய  மண் அணை என்ற பெருமை பெற்ற பவானிசாகர் அணை  இன்று 65 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்