இடிந்து விழுந்த அரசு கல்லூரி மாணவர் விடுதி : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்

மதுரை சாத்தமங்கலம் பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவர் விடுதி இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடிந்து விழுந்த அரசு கல்லூரி மாணவர் விடுதி : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்
x
இந்த விடுதியில் 119 மாணவர்கள் தங்கி படித்து வரும் நிலையில், தொடர் மழையால் விடுதியின் சமையல் கூடத்தை ஒட்டி உள்ள உணவருந்தும் இடம் திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு மாணவர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. விடுதிக்கு மாற்றாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புது கட்டிடம் கட்டப்பட்டு  திறக்கப்பட்ட நிலையில், இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என்று கூறப்படுகிறது. கட்டிட சேதம் குறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததே விபத்துக்கு   காரணம் என மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்