முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் தொடக்க விழா : சேலத்தில் இன்று நடைபெறுகிறது

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை, சேலத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.
முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் தொடக்க விழா : சேலத்தில் இன்று நடைபெறுகிறது
x
கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் நேரடியாக சென்று, மக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும்  வகையில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில், 110-வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, இன்று, சேலம் மாவட்டத்தில் நந்க்கவள்ளி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று,  சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தொடங்கிவைக்கிறார். அங்கு பொதுமக்களிடம் மனுக்களை பெறுவதோடு, அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். 

வருவாய் மற்றும் பெரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்வில் அந்த துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொள்கிறார். முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் மூலம் அனைத்து நகரப்புற வார்டுகள் மற்றும் கிராமங்களில் வருவாய், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர் குழு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நேரடியாக சென்று மனுக்களை பெறும். அதனை தொடர்ந்து அம்மனுக்கள் ஒரு வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, ஒரு மாத காலத்திற்குள் தீர்வு எட்டப்படும்.

Next Story

மேலும் செய்திகள்