மழை நீரால் நிரம்பி வரும் அனந்தசரஸ் குளம் - ஐதீகம் உண்மையானதாக பக்தர்கள் மகிழ்ச்சி

அத்தி வரதரின் அனந்தசரஸ் குளம் மழை நீரால் நிரம்பி வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழை நீரால் நிரம்பி வரும் அனந்தசரஸ் குளம் - ஐதீகம் உண்மையானதாக பக்தர்கள் மகிழ்ச்சி
x
காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவம் நிறைவடைந்ததை அடுத்து, மீண்டும் அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் வைக்கும் போது மழை வரும் என்பது ஐதீகம். இந்நிலையில்,  சயன கோலத்தில் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் வைக்கப்பட்ட உடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள மலை பிரகாரம், ஆளவந்தார் பிரகாரம், வெளிப்பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து சேரும் மழைநீரால் அனந்தசரஸ் குளமானது நிரம்பி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்