ஊராட்சி அலுவலக தளவாட பொருள்கள் திருட்டு - ஊராட்சி அலுவலர் கைது
சேலம் மாவட்டம் ஓமலூர் புளியம்பட்டி ஊராட்சியில் தளவாட பொருள்களை திருடி விற்றதாக ஊராட்சி அலுவலர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் புளியம்பட்டி ஊராட்சியில் தளவாட பொருள்களை திருடி விற்றதாக ஊராட்சி அலுவலர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஓமலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்துள்ள புகாரில், ஊராட்சி அலுவலர் குமார் என்பவர் ஊராட்சி அலுவலகத்தில் இருந்த மின் மோட்டார் மற்றும் இரும்பு தளவாடி பொருட்களை திருடி பழைய இரும்பு கடையில் 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை குமாரை கைது செய்த ஓமலூர் போலீசார், திருடப்ட்ட பொருள்களை மீட்டனர்.
Next Story