காவிரி டெல்டா பகுதியை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவிக்க கோரி தஞ்சாவூரில் 28-ஆம் தேதி கருத்தரங்கம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நிறைவுரை

காவிரி டெல்டா பகுதியை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவிக்க கோரி வரும் 28-ம் தேதி தஞ்சாவூரில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கை தி.மு.க. நடத்துகிறது.
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி தஞ்சாவூரில் 28-ஆம் தேதி கருத்தரங்கம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நிறைவுரை
x
இது தொடர்பாக தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் , மத்திய - மாநில அரசுகளின் அலட்சியப் போக்கால் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் காலியாகி, விவசாயமும், விவசாய தொழில்களும் முழுமையாக நலிவடைந்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டம் ஆகியவற்றை அறிவித்து, அதனை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி காவிரி டெல்டாவை  பாலைவனம் ஆக்கிட மத்திய அரசு  முயற்சித்து வருவதாகவும் குறை கூறப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதியை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவிக்க கோரி, வருகிற 28 ந்தேதி தஞ்சாவூரில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் நடைபெற உள்ளதாகவும், அதில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் நிறைவுரை ஆற்ற உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்