பிரபல தோல் தொழிற்சாலை பெயரை பயன்படுத்தி மோசடி : ரூ.10 கோடி மோசடி செய்த தம்பதி கைது

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தனியார் தோல் தொழிற்சாலை பெயரை போலியாக பயன்படுத்தி, 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
பிரபல தோல் தொழிற்சாலை பெயரை பயன்படுத்தி மோசடி : ரூ.10 கோடி மோசடி செய்த தம்பதி கைது
x
ஆம்பூர் நூருல்லாபேட்டை பகுதியை சேர்ந்த அஷ்பாக், அவரின் மனைவி ஷாயிகா உள்ளிட்ட 5 பேர் பிரபல தனியார் தோல் தொழிற்சாலை பெயரை போலியாக பயன்படுத்தி, பல லட்சம் ரூபாய் மதிப்பில் தோல் வாங்கிக்கொண்டு பணம் தருவதாக ஏமாற்றியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள், மாவட்ட குற்றவியல் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அஷ்பாக் தம்பதி, 10 கோடி ரூபாய்க்கும் மேல் தோல் பெற்றுக் கொண்டு பணம் தராமல் ஏமாற்றியது தெரியவந்தது. இதனையடுத்து அஷ்பாக் - ஷாயிகா தம்பதியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்