பாடல்கள் பாடி பாடத்தை மனதில் பதிய வைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் பாடல்கள் பாடி கற்பித்து வருகிறார்.
x
புதுச்சேரி குயவர்பாளையம் சுந்தர மேஸ்திரி வீதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வரும் சீனு மோகன்தாஸ் மாணவர்களுக்கு பாடல் கற்பிக்கும் முறையில் புதுமையை புகுத்தி வருகிறார். சத்தான உணவு வகைகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பாடல்கள் பாடி கற்பித்து வருகிறார். கீரையின் பயன்பாடு, அதில் உள்ள சத்துகள் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு விளக்குவதற்காக தினமும் பாடல்களை பாடி அதை கற்பித்து வருகிறார். பாடல்கள் பாடி விளக்குவதால் சிறுவர்கள் முதல் பெரிய மாணவர்கள் வரை எளிதாக புரிந்து கொள்வதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவிக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்